Thursday, 23 June 2011
வாழைப்பூ உசிலி
வாழைப்பூ, 1
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு
செய்முறை
வாழைப்பூவை பொடிதாக நறுக்கி, சிறிது மோர் ஊற்றிய நீரில் போடவும்.
தண்ணீரில் வேக விடவும்.தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.
மேற்சொன்ன பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.
பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.
உசிலி ரெடி.
Labels:
சுவைப்போம் அறுசுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment