Wednesday, 22 June 2011

வாழைக்காய் பஜ்ஜி


தேவையான பொருட்கள் :
கடலை மாவு- ஒரு கோப்பை
அரிசிமாவு- ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்- கால்த்தேக்கரண்டி
சோடா- ஒரு சிட்டிகை
கேசரி கலர்- ஒரு சிட்டிகை
உப்பு- ஒரு தேக்கரண்டி
வாழைக்காய்
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
வாழைக்காயை நீளவாக்கில் இரண்டு சைட் தோலிருக்கும் படி செதுக்கி கொள்ளவும்.
கடலைமாவுடன் அரிமாவு மற்றும் அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வையான நீரைச் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகளைப் மாவுக் கலவையில் ஒவ்வொன்றாக தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு சிவக்க பொரிக்கவும்.
சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.

No comments:

Post a Comment