Wednesday, 22 June 2011
வாழைக்காய் புளி வறுவல்
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் -1
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
புளி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காயின் தோலை சீவி விட்டு 1/4 அளவிற்கு வட்டமாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுக்கவும். புளி பேஸ்ட் என்றால் அப்படியே உபயோகிக்கலாம்.
வாழைக்காய் துண்டுகளை நன்றாக அலசி விட்டு, தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி,புளி பேஸ்ட் சேர்த்து பிதரவும் . தேவைப்பட்டால் ஒரு கை நீர் தெளித்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். வாழைக்காய் துண்டுகளை தனித்தனியாக எடுத்து விட்டு, மிதமான தீயில் ஒரு மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்பொழுது மூடியைத் திறந்து மெதுவாக காயைத் திருப்பி விடவும். காய் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் மூடி வைக்கவும். காய் வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு, சிறு தீயில் நன்றாக சிவக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
Labels:
சுவைப்போம் அறுசுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment