Wednesday 10 November 2010

உப்புமா



தேவையான பொருட்கள்

ரவை - 1 கோப்பை (250 கிராம்)
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 1
இஞ்சி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - 25 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கோப்பை
உப்பு - 1/2 தேக்கரண்டி

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை மிதமான தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக பிளந்து கொள்ளவும். இஞ்சை பொடியாக துறுவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து, பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்க வேண்டும்.
அடுத்து பச்சைமிளகாய், இஞ்சி, கேரட்டை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு தண்ணீர், உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
ரவை வெந்ததும் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment