Wednesday, 10 November 2010

எள் உருண்டை


தேவையான பொருட்கள்

எள் 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை

எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்]
அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள்.
சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும்.
உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். உருண்டைக்கு பதிலாக, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி அமத்தி, துண்டுகளாக வெட்டயெடுக்கலாம்.

உருண்டை பிடிக்கும் போது கொஞ்சம் மாஜரினை தொட்டு பிடித்தல் கையில் ஒட்டாமல் இருக்கும்.
உருண்டையை உங்களுக்கு வேண்டிய அளவில் பிடிக்கலாம்

No comments:

Post a Comment