Saturday, 13 November 2010

மாலு பாண்


தேவையான பொருட்கள்:
மா - 3 பேணி
ஈஸ்ற் - 3 தே.க
சீனி - 1 தே..க
பட்டர் - 1/2 தே.க
முட்டை மஞ்சள் கரு - 1
உப்பு - தேவையான அளவு (1 தே.க)

ஈஸ்ற், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு மூன்று தே.க இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இக் கலவை பொங்கி வரும்.இதில் மா, உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.
இதை கொஞ்ச நேரம் மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் வைப்பது போல் கறியினை போட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் எண்ணை தடவிய தட்டில் எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள்.
வேகும் போது பாணின் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சற் கருவை ஒரு தூரிகையினால் (Brush) தொட்டு பூசிவிடுங்கள். 150Cயில் 30 நிமிடங்கள் oven ல் சூடாக்கிக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment