Thursday, 1 December 2011

நெத்திலி மீன் குழம்பு


தேவையானவை :
நெத்திலி மீன் – அரைக் கிலோ
புளி – இரண்டு எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
இஞ்சி, பூண்டு – தேவையான அளவு
தக்காளி – மூன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூ‌ன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
பச்சை மிளகாய் – ஆறு
கொத்துமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று

செய்முறை:
மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும். புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும். இ‌‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌க்கு‌ம் போது அதனுட‌ன் ஒரு வெ‌ங்காய‌த்தையு‌ம் போ‌ட்டு அரை‌த்து ‌விழுதாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெ‌ங்காய‌ விழுது சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவு‌ம். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மீனை போட்டு இறக்கவும். குழ‌ம்‌பி‌ல் ‌மீனை போ‌ட்ட ‌பிறகு கர‌ண்டியை வை‌த்து ‌வேகமாக‌க் கிள‌‌ற‌க் கூடாது. சுவையான நெத்திலி மீன் குழம்பு தயா‌ர்.

No comments:

Post a Comment